பக்கம்:காரும் தேரும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 o காரு தேரும்

முந்தை யிருந்து நட்டோர் கொடுப்ப

நஞ்சும் உண்பர் கனிநா கரிகர் ---,

- -நற்றினை : 3 55: 6-7.

As -

என்று குறிப்பிடுகின்றது. பண்பாட்டினைப் பற்றிக் கூறவந்த இடத்தில் திருவள்ளுவர்,

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்

-திருக்குறள்: 9 96.

என்று குறிப்பிட்டுள்ளார். பண்பாடு உள்ளவர்களாலேயே இப்பாரகம் வாழ்ந்து வருகிறது என்று திருவள்ளுவர் கூறுவரே யானுல் பண்பாட்டின் பெருமை தானே விளங்கும். கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை” யில் காணப்படும் ஒரு நெய்தற்கலிச் செய்யுள் பண்பாட்டின் இலக்கணத்தை நன்கு உணர்த்துகின்றது.

ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிங் தொழுகுதல் அன்பெனப் படுவது தன் கிளை செறாஅமை, அறிவெனப் படுவது பேதையார் சொல்கோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாஅமை நிறைவெனப் படுவது மறைபிறர் அறியாமை முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்.

-நெய்தற் கவி 16, 6-14

இப்பாடலிலிருந்து பண்பாட்டின் சிறப்புக் கூறுகளை யெல்லாம் நாம் நன்குணர்ந்து கொள்ளலாம்.

உறுகண் உற்றோர்க்கு உதவுவதே ஆற்றுவது என்பதும், நட்பிற்புணர்ந்தோரை விட்டு நீங்காதிருப்பதே போற்றுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/12&oldid=553990" இலிருந்து மீள்விக்கப்பட்டது