பக்கம்:காரும் தேரும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 காரும் தேரும் விடப் புறவுலகில் மாணவர் o பெறும் கல்வி-அனுபவக்

கல்வி மிகுதியாகவுள்ளது. o - * , -

கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்று கூறுகிறது நாலடியார். வாழ்வு சிறிது வளர்கலை பெரிது’ என்பர் பெரியோர். நாள்தோறும் பல்வேறு துறைகளைப் பற்றிப்பல் வேறுநூல்கள் வெளிவந்து கொண்டிருப்பதனைக்காணலாம். நூல்கள் கல்வித் துறையில்-ஏன்? வாழ்வில் பெரும்பங்கு கொள்கின்றன. ஒர் உயர்ந்த நூல் உத்தமர் ஒருவரின் குருதிக்குச் சமம் என்று ஜான் மில்டன் குறிப்பிட்டுள்ளார்.' 'என்னை விட்டு நீங்காத நல்ல நண்பர்கள் நூல்கள்: அவர்களோடு நாளும் நான் உரையாடி மகிழ்கிறேன்' என்று இராபர்ட் சதே என்னும் மேற்புலக் கவிஞர் அறிஞர்' என்ற தம் கவிதையில் குறிப்பிட்டுள்ளார்?.

மரவேலை செய்யும் தச்சனுக்கு ஒரே சீரான நேரான மரம் கிடைப்பதில்லை. கோணலான மரம் கிடைப்பினும் அதனை ஒழுங்கு செய்து. தன் வேலைக்கு உகந்ததாக்கிக் கொள்கிறான்; பின், உறுதியான நூலை எடுத்து அதனைக் கரிக் குழம்பிலோ, செம்மண் குழம்பிலோ தோய்த்து மரத்தில் கோடிட்டுக்கொண்டு, மரத்தின் வளைவைகோணலைப் போக்குகின்றான். அதே போலக் கருத்தி லிருந்து பிறக்கும் நூல் மனத்தின் கோணலைப் போக்கு கிறது. மேலும் செஞ்சொற் புலவன் ஆக்கிய நூல் உடம் பின் உள்ளிருக்கின்ற ஞானவளத்தை வளர்வித்து, தீமை யாகிய அஞ்ஞானத்தை அகற்றி, மனவிருள் போக்கி மாண்பினைப் புகட்டுகிறது என்று நன்னுால் நயமுற நவில்கின்றது.

1. A good book is a precious life-blood of a masterspirit, embalmed and treasured upon purpose to la life beyond life - —John Milton

2. My never failing friends are they with whom converse day by day —Robert Southey-‘scholar'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/120&oldid=554111" இலிருந்து மீள்விக்கப்பட்டது