பக்கம்:காரும் தேரும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியும் கருத்தும் 121

கற்ற வழி நிற்க மேண்டுமென்ற கட்டுப்பாடும், தெளிவான பிந்தனையும், தன்னம்பிக்கையும், ஊக்கமும் ஒழுக்க உணர்வும், நடுவு நிலை பிறழாத நன்னெறியும் கொண்டு நிகழவேண்டும். மாண் என்ற சொல்லிற்குப் பெருமை, பிறப்பு என்பது பொருள். மாணவர் என்றால் பெருமைக்

குரியவர்கள், சிறப்பிற்குரியவர்கள் ஆவர். கல்வியும் கருத்தும் மறைந்த மாண்புடையவர்களாக மாணவர்கள் திகழ்வார் ளேயானால் அதனால் வீடும் நாடும் விளக்கமுற்று, ஒழுங்கும் உயர்வும் ஒளிர்ந்து மிளிர்ந்து நிறைந்திலங்கும் வன்பதில் எத்துணையும் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/123&oldid=554113" இலிருந்து மீள்விக்கப்பட்டது