பக்கம்:காரும் தேரும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. வைணவ சமயத்தின் பழமை

மனித நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தவை சமயங்களாகும். மனித வாழ்வு சீர்பெற்றுத் துலங்கப் பெரியோர்கள் வகுத்துச் சென்ற வழியே சமயமாகும். நல்லாற்றின் நின்று நன்னெறிப்பட்டு நல்வாழ்வு வாழவே சமயங்கள் வழிவகுக்கின்றன. பல்வேறு சமயங்கள் நம் நாட்டில் பல்கிப் பெருகியிருந்தாலும் தொன்மைச் சிறப் புடைத்தான சமயங்கள் சிலவேயாம். அச்சிலவற்றுள்ளும் சைவம், வைணவம், பெளத்தம், சமணம் என்னும் நான்கு சமயங்களும் தமிழகத்தில் பண்டுதொட்டு நிலவிவரும் சமயங்களாகும். இவற்றினுள்ளும் இந்த மண்ணில் தோன்றி மலர்ந்து, இன்னும் சிறக்க வாழ்ந்துவரும் சமயங்கள் சைவம் வைணவம் என இரண்டேயாம். இந்த இரண்டனுள் ஈண்டு வைணவத்தின் பழமை குறித்த செய்திகளை விரிவாகக் காண்போம். -

வைணவ சமயக் கடவுளான 'விஷ்ணு' என்ற சொல் லிற்கு எங்கும் வியாபித்துள்ளவன்' என்பது பொருளாகும். இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங் களிலும் கூறப்பட்ட கடவுளாக விஷ்ணுபர தேவதையாக வும் திருமூர்த்திகளில் ஒருவராகவும் குறிப்பிடப்படுகின்றார். பல்வேறு அவதாரங்களை இவர் எடுத்தது மன்பதையினைப்

புரப்பதற்காக என்று நூல்கள் நவில்கின்றன. துட்டர் களை அழிப்பதற்கும் துளயோரைக் காப்பதற்கும் நான் யுகந்தோறும் அவதாரம் செய்கின்றேன்' என்று

கீதாசாரியனான கண்ணபிரான் கீதையில் மொழிந் துள்ளார். பாணினி சூத்திரப்பாடியத்தில் பதஞ்சலி முனிவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/124&oldid=554115" இலிருந்து மீள்விக்கப்பட்டது