பக்கம்:காரும் தேரும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o o o o

. - - " - o ്. ■_ 。 فادحة வைணவ சமயத்தின் பழமை 123

o ് ** = - . . - . * --- H. வாசுதேவனைப் பரதெய்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொசண்டி என்ற ஒர் இடத்தில் கிடைத்த கல்வெட்டு கொண்டு, கி. மு. 700-க்கு முன்னரேயே வாசுதேவனுக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தமையினை அறிஞர் ஆர். ஜி. பந்தர்கார் தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறு வேதபுராண இதிகாசங்கள் கொண்டு வைணவ

சமயத்தின் தொன்மையினைச் சுட்டிக் காட்டலாம். ਾਂ

இனிப் பழந்தமிழ் நூல்களில் வைணவ சமயங் குறித்தும்

வைணவ சமயக் கடவுளான திருமால் குறித்தும் உள்ள் செய்திகளை முறையே நோக்குவோம். * - I -, -o

பழந்தமிழ் இலக்கணப் பெரு நூலான தொல்காப்பி பக்திலேயே திருமால் வணக்கம் பேசப்படுகின்றது. நிலத்தை நான்காகப் பகுத்து அந்நிலங்களுக்குரிய கடவுள் ரையும் கூறும் தொல்காப்பியன்ார் மாயோன் மேய காடுறை உலக மும்’ என்று, காடும் காட்டைச் சார்ந்த முல்லை நிலத்திற் குக் கடவுளாக மாயவனாம் திருமாலைக் குறிக்கின்றார். அகத்திணை இயலில் இவ்வாறு குறிப்பிட்டதோடு அமை யாது புறத்திணையியலிலும், " - ..

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் தாவா விழுப்புகழ் பூவை நிலையும்

-தொல்காப்பியம், புறத்திணை இயல்: 60

என்று தொல்காப்பியனார் மாயோனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மாயோனுடைய காத்தற் புகழை

மன்னவர்க் குவமையாகக் கூறும் பூவை நிலை' என்று

நச்சினார்க்கி னியர் இப்பகுதிக்கு உரை வரைந்துள்ளார் .

மேலும் புறநானூற்றுப் பாடற்பகுதி யொன்றினையும்,தம்

மரைக்கண் பொதிந்து தந்துள்ளார். அது வருமாறு: o

கடல்வளர் புரிவளைபுரையுமேனி அடல்வெங் காஞ்சிற்பனைக்கொடியோனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/125&oldid=554117" இலிருந்து மீள்விக்கப்பட்டது