பக்கம்:காரும் தேரும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணுறு திருமணி புரையுமேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்

-புறநானுாறு : 56 : 3-6

என்ற இப்பகுதியில் பலராமனும் மாயோனும் குறிக்கப்படுகின்றார்கள். அகநானுாற்றில் தனுஷ்கோடித் துறையில் ஒர் ஆலமரத்தின் கீழ்த் தங்கி வானர சேனை களோடு இலங்கைமேற் படையெடுப்பு குறித்து ஆலோசனை செய்தபோது அப்பறவைகள் ஒலியெழுப்ப, அதனைத் தன் கைகள் காட்டி ஒலிசெத்து அடங்கச் செய்தான் இராமன் என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது:

வென்வேல் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக் கவிந்த பல்வீழ் ஆலம் போல.

-அகநானுாறு : 70 : 3-16

அடுத்து இராமாவதாரக் கதைக் குறிப்பு புறநானுாற்றில் பேசப்பட்டுள்ளது. இராவணனால் கவர்ந்து கொண்டு செல்லப்பட்ட சீதை தன் அணிகலன்களைக் கழற்றிப் பூமி யில் எறிந்ததும், அதனைக் குரங்குக் கூட்டங்கள் கண்டெடுத்து முறை தவறிப் புனைந்து நகையெழுந்ததுமான செய்தி

கடுக்தேர் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை நிலஞ்சேர் மரதாணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை.

-புறநானுாறு : 378 : 8-2 !

எனக் கூறிச் செல்லும் பகுதியால் அறியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/126&oldid=554119" இலிருந்து மீள்விக்கப்பட்டது