பக்கம்:காரும் தேரும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைணவ சமயத்தின் பழமை 125

மேலும் பரிபாடலில் எட்டுப் பாடல்கள் திருமாலைப் பற்றியனவாகும். பிரமன் சிவன் இருவர்க்கும் தந்தை திருமால் என்றும், படைத்தல், அளித்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் காரணமாகவும் பல பிறப்புகள் எடுப்பினும் பிறப்பித்தோர் இல்லை என்றும், உலகத்து உயிர்களின் உறுகண் நீக்கும் உரவோன் என்றும் பின்வரும் பரிபாடற் பகுதிகள் கொண்டு அறியலாம்.

இருவர் தாதை! இலங்குபூண் மாஅல்!

-பரிபாடல் 1 : 28

முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலின் பிறவாப் பிறப்பிலை, பிறப்பித்தோ ரிலையே

-பரிபாடல் : 3 : 71-72

எவ்வயின் உலகத்துங் தோன்றி அவ்வயின் மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்.

-பரிபாடல் : 1.5 : 5 1-5 2

இவை தவிரப் பத்துப்பாட்டின் பலவிடங்களிலும் திருமாலைப் பற்றிய குறிப்பு வந்துள்ளது:

கருடக் கொடியோன் திருமால் என்பதும், அவன் காக்கும் கடவுள் என்பதும்,

புள்ளனரி நீள்கொடிச் செல்வன்

-திருமுருகாற்றுப் படை 15 1

என்றும், -

நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கை

-திருமுருகாற்றுப்படை : 1.60-81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/127&oldid=554121" இலிருந்து மீள்விக்கப்பட்டது