பக்கம்:காரும் தேரும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைணவ சமயத்தின் பழமை 127

கலித்தொகையின் பல பாடல்களில் திருமால் பேசப் படுகின்றார். வள்ளுரு நேமியான்' என்றும், பாடிமிழ் பரப்பகத் தரவணை யசைஇய ஆடுகொள் நேமியான்' என்றும், தேயா விழுப்புகழ்த் தெய்வம்' என்றும், ஞால மூன்றடித்தாய முதல்வன்' என்றும் பலவாறு திருமாலின் புகழ் கிளத்திக் கூறப்பட்டுள்ளது.

திருக்குறளில் வரும்

மடியிலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு -திருக்குற ள் : 61 என்ற குறட்பாவும்,

தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு

--- -திருக்குறள்: 1113

என்ற குறட்பாவும் திருமாலைப் பற்றிக் குறிக்கும் எனக் கூறுவர் சிலர். -- -*

திரிகடுகம் என்னும் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூலில்,

- *

கண்ணகன் ஞால மளந்தது உம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததும்-கண்ணிய மாயச் சகட முதைத்தது உம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ண னடி *** - - - - ** -திரிகடுகம் : காப்பு

என்று காணப்படும் வெண்பாவில் திருமால் உலகளந்ததும்,

குருந்த மரத்தைச் சாய்த்ததும், மாயச் சகடம் உதைத்ததும்

ஆன கதைக் குறிப்புகள் காணப்படுகின்றன.

o

சிலப்பு திகார த்தில் மாங்காட்டு மறையோன் - கோவல னுக்குத் திரும்ாலின் கிடந்த திருக்கோலத்தை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/129&oldid=554124" இலிருந்து மீள்விக்கப்பட்டது