பக்கம்:காரும் தேரும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 11 .

என்பதும், தொடர்புகொள்ளும் ஒவ்வொருவரின் இயல் புணர்ந்து அதற்கியையப் பழகுதலே பண்பாடு என்பதும், தம் உறவினைக் கோபித்து விலக்காமையே அன்பு என்பதும் அறிவிலார் கூறும் புன்சொற்களைப் பொறுத்துக் கொள்ளு தலே செறிவு என்பதும், மறைக்கப்பட வேண்டுவனவற்றை மற்றவர் அறியாது காத்தல் நிறைவு என்பதும், தனக்கு இன்னார் இனியார் என்று கருத மல் அவரவர்தம் குற்றத்திற்குரிய தண்டனையினை வழங்குதலே முறை என்பதும், நம்மைப் போற்றார் செயல்களையும் நயந்து தாங்கிக்கொள்ளுதலே பொறை என்பதும் விளக்க முறு ன்ெறன.

பிறர் தம் இயல்பும் மனப்போக்கும் கண்டுணர்ந்து மதித்து, அதற்கியைப நடந்துகொள்ளலே இவண் பண்பு" எனக் குறிக்கப்பட்டது. இத்தகு பண்புடையவர்களாலேயே இவ் வுலகம் இடையறாது வாழ்ந்துகொண்டிருக்கிறது. தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் பெருந்தகை மையும் பெரு மனமும் உடையவர்கள் உயிர்த்திருப்பதால் உலகம் உய்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய பண்பாட் -ாளர்கள் இந்திரர் அமிழ்தமே தமக்குக் கிடைப்பதாக இருந்தாலும் அஃது இனிமை யுடைத்து என்று தாங்கள்

மட்டுமே உண்ணமாட்டார்கள். இவர்கள் வெகுளிக்கும் வெறுப்பிற்கும் ஆட்பட மாட்டார்கள்; சோர்வு

என்பதனைத் துாரத்தள்ளியவர்கள் இவர்கள்.சோம்பலுக்கு இரையாகிாமல் செயாலாற்றும் இவர்கள். அஞ்சவேண்டுவன இவை என்று அறவோர் உரைத்தனவறிற்கு அஞ்சி, புகழ் என்றால் தம்இன்னுயிரையும் ஈந்து, பழியென்றால் உலகையே. பெறுவதாயிருப்பினும் வேண்டாம் என ஒதுக்கி, தமக் கென்றில்லாமல் பிறர்க்கென்றே பெரிதும் வாழ்வதால் இவ் வுலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்று புற நானுாற்றுப் புலவருமாய கடலுள்மாய்ந்த இளம் பெருவழுதி புகன்றுள் வார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/13&oldid=553991" இலிருந்து மீள்விக்கப்பட்டது