பக்கம்:காரும் தேரும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 காரும் தேரும்

நீலமேகம் நெடும்பொற் குன்றத்துப் பால்விரிங் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை யருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெருங் துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்

-சிலப்பதிகாரம் : 1.1 : 35-40

என்றும், திருமாலின் நின்ற திருக்கோலத்தை,

வீங்கு நீரருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்க இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற் பூண்டு நன்னிற மேகம் கின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமுங் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி களங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் கெடியோன் கின்ற வண்ணமும்

-சிலப்பதிகாரம்: 11: 41-51

என்றும் வருணிக்கின்றான்.

கண்ணகி காண மாதரி வீட்டில் ஆய்ச்சியர்கள் ஆடிய குரவைக் கூத்து முழுவதும் திருமாவின் பெருமையினைப் பலபடப் பேசுவதாகவே உளது. ஒரு பாடல் மட்டும் ஈண்டுக் குறிப்பிடப்படுகின்றது: -

மூவுலகும் ஈரடியால் முறை கிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போக்து சோவரனும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/130&oldid=554126" இலிருந்து மீள்விக்கப்பட்டது