பக்கம்:காரும் தேரும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைணவ சமயத்தின் பழமை 129

சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!

-சிலப்பதிகாரம்; ஆய்ச்சியர் குரவை

இவ்வாறாகப் பழந்தமிழ் நூல்களில் வைணவ சமயத் தின் சிறப்புப் பேசப்பட்டுள்ளது.

விஷ்ணு விரும்பியுறையும் தலங்களில் மிகப் பழமை யானவை திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, திரு வரங்கம், காஞ்சிபுரம் முதலிய திருப்பதிகளாகும் என்ப தனைப் பின்வரும் வெண்பாவால் அறியலாம்: -

தேனோங்கு சோலைத் திருவேங்கட மென்றும் வானோங்கு சோலைமலை யென்றும்-தானோங்கு தென்னரங்க மென்றும் திருவத்தி யூரென்றும் சொன்னவர்க்கும் உண்டோ துயர்!

திருமால் தம் திருப்பெயரினை உருக்கத்தோடு உரைத் தால் துன்பமெல்லாம் தொலைந்து தீயினில் துரசாகும்! என்று கருதப்படுவதன் அடிப்படையில்,

நாவுண்டு நீயுண்டு நாமம் திரித்தோதப் பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ-பூவுண்டு வண்டுறங்கும் சோலை மதிளரங்கத்தே உலகை உண்டுறங்குவான் ஒருவன் உண்டு

என்ற பாடல் உருக்கமாக-உறுதியாக எழுந்தது.

இவ்வாறு நற்பதத்தினை நல்கும் திருமால் நெருப்பில் குடாய், பூவினில் நறுமணமாய், கல்லினுள் மணியாய், சொல்லினுள் வாய்மையாய், அறத்தினுள் அன்பாய், மறத் தினுள் வலிமையாய், அனைத்துமாய், அனைத்தினுட் பொருளுமாய் விளங்குகின்றார் என்று பரிபாடல் கூறும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/131&oldid=554127" இலிருந்து மீள்விக்கப்பட்டது