பக்கம்:காரும் தேரும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 காரும் தேரும்

தீயினுட் தெறல் நீ பூவினுள் நாற்றம் கல்லினுள் மணியும் சொல்லினுள் வாய்மை * அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ

அனைத்தும்ே அனைத்தினுட் பொருளும்.ே

-பரிபாடல்: 3: 63-68

மேலும், குளிர்ந்த கடலிண்கண் உள்ள ஒவ்வொரு நீர்த்திவலையிலும், பரந்த பூமி முழுவதிலும், மண்ணும் விண்ணும் மாறுபாடின்றி நுட்பமான எந்தப் பொருளி னுள்ளும் பரந்து திருமால் விளங்குகின்றான் என்பர்.

திருமால் எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி விளங்கும் தன்மையினை வடமொழியில் அந்தர் யாமி' என்பர்.

இவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களிலேயே வைணவத் தின் பழமையும் சிறப்பும் பேசப்படுகின்றன. திருமாலின் பிறப்பும், செயலும் கூறப்படுகின்றன. இடைக்காலத்தில் வைணவத்தின் பெருமையினை ஆழ்வாராதிகளும், பின்வந்த ஆசார்யப் பெருமக்களும் பெரிதும் வளர்த்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/132&oldid=554128" இலிருந்து மீள்விக்கப்பட்டது