பக்கம்:காரும் தேரும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 காரும் தேரும்

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியே பொதிய மலை. பொதிய மலையில் பிறந்த மொழி தமிழ் மொழி. அது தென்றலுடன் தவழ்ந்து வருவது. இப்பொதிய மலை யைச் சார்ந்ததுதான் திருக்குற்றாலமலை. கவினுறு காட்சி களை வழங்கிக் கண்ணையும் கருத்தையும் குளிர்விப்பது இம் மலையே யாகும். வளமும் வனப்பும் நிறைந்த குற்றாலத்தை நினைக்கும் பொழுதே அழகிய அருவிகளின் கவினுறு காட்சிகள் நம் கண் முன்னே வந்து நிற்கின்றன. எழில் உணர்வையும் இன்ப உணர்வையும் புதுமை உணர்வை யும் ஒருங்கே தருவது திருக்குற்றாலமாகும். தென்மேற்குப் பருவக் காற்று வீசத் தொடங்கிவிட்டால் குற்றாலமலையில் குளிர் சாரல் தொடங்கிவிடும். வைகாசித் திங்களின் பிற் பகுதியில் குற்றால மலை குளிர்ந்து மனத்திற்கு இதந் தரும் குளிர் காற்றைத் தருகிறது. சிறு துாறலும் இடையிடையே அமைந்து குளிர் துரங்கும் குற்றாலத்தின் சாரல் களை கட்டி விடுகிறது. இக் கவின் மிகு காட்சியினை மனோன் மணிய ஆசிரியர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள்,

கொண்மூ என்னும் கொள்கலம் கொண்ட அமிழ்தினை அவ்வயின் கவிழ்த்தபின் செல்புழி வழியும் நீ ரேகம் மிடிநீர் சாரல்

என்று மேக முழக்கத்தினையும் மென்காற்றினையும் மலை யினையும் போற்றுகின்றார்.

திருக்குற்றாலம் இயற்கை எழில் ஆனந்தக் கூத்திடும் அழகுத் திருவிடமாகும். குறிஞ்சி நிலக் காட்சிகள் உள்ளங்: களை யெல்லாம் அள்ளிக் கொள்ளை கொள்ளும் நீர்மை யனவாய் உள்ளன. குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. தேனருவி, செண்பக அருவி, வட அருவி, ஐந்தருவி, புலி, அருவி முதலியன அவற்றில் குறிப்பிடத் தக்கவை. முழவதிர அதிர்ந்து மலையினின்றும் இவர்ந்து மெல்லிசைத் தீம்பண் மிழற்றிவரும் இவ்வருவிகளின் ஒசை செவியினைக் குளிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/134&oldid=554130" இலிருந்து மீள்விக்கப்பட்டது