பக்கம்:காரும் தேரும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர் துரங்கும் குற்றாலம் 133

வித்துச் சிந்தையினை நிறைவிக்கும். தேவார காலத்திலேயே இவ்வருவிகள் சிறப்பிடம் பெற்று விட்டன. சைவம் தழைக்க வந்த சம்பந்த சுவாமிகள் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த தம் திருக்குற்றாலப் பதிகத்தில் அழகு அணி நடம் செய்யும் இக் குற்றாலத்தினை அழகுறப் பாடியுள்ளார். பலமுறை கண்டவர்க்கும் புதுமையே பொருந்தும் மலை காலத் தாலும் இடத்தாலும் நீடிக்கும் சாரல் கோலவண்டு யாழொலி மிழற்றும் சோலை; அவ்வழகுச் சூழலில் கொன் றைப் பூவினை விரும்பியமர்ந்து பால் நெய் யாடிய பரமன் உறையும் கோயில் ஆகிய அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் சண்பைக் காவலர் சம்பந்தர். அப்பாடல் வருமாறு:

வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக் l கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம் அம்பால்நெய்யோ டாடல் அமர்ந்தான் அலர்கொன்றை நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள். . . . "

நீறன்னிந்து தொண்டர்கள் பின்செல்ல நாள் விழா நிறைந்த குற்றாலத்தில், முல்லை சண்பகம் வேங்கை முதலிய கொடிகளின் மீதும், மரத்தின் மீதும், மெல்லிய அரும்புகள் அரும்பியுள்ளன. பக்க மலைகளில் மா, பலா வாழை முதலிய முக்கனிகள் நிறைந்துள்ளன. குட்டியுடன் வந்த தாய்க் குரங்கு வாழைப் பழத்தை உண்ணுகின்றது. நீலமலர் போலும் கண்ணையுடைய குறத்தியர் மாணிக்கத் தைக் கொண்டு கிளியோட்டி, முற்றிய தினைக் கதிர்களைக் காப்பாற்றுகின்றனர்; சுனை சூழ்ந்த சோலையில் மயில் பெடையோடு விளையாடுகின்றது; பூக்களையும் பொன்னை யும் உந்தித் தள்ளி அருவி நுண் துளி வீசுகின்றது. பாம்பின் பல்லைப் போலத் தோன்றும் குரவம் பாவையின் அரும்புகள் சோலையில் மலர்ந்து மணம் பரப்புகின்றன. வண்டுகள் இனிய செவ்வழிப் பண்ணை இசைக்கின்றன. -இவ்வாறு குற்றாலத்தின் கோலமிகு இயற்கை யழகினை ஞாலம்

«Бт–9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/135&oldid=554131" இலிருந்து மீள்விக்கப்பட்டது