பக்கம்:காரும் தேரும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 காரும் தேரும்

உய்யவந்த ஞானசம்பந்தப் பெருமான் மேலும் புனைந்து பாடியுள்ளார்.

திருக்குற்றாலக் குறவஞ்சி பதினெட்டாம் நூற்றாண் டில் வாழ்ந்த திரிகூட ராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்ட நூலாகும். இந்நூல் குறவஞ்சி நூல்களிலேயே தலையாயது. பவனிவந்த தலைவனைக் கண்டு தலைவி மயங்கித் தன் நிலையைத் தோழிக்குக் கூறுதல், குறத்தி மலைவளம் முதலியன கூறிப் பின்னர்த் தலைவி கேட்ட குறி கூறிப் பரிசு பெறுதல், அவளைக் குறவன் தேடி வந்து காணுதல் முதலிய பகுதிகள் குறவஞ்சியில் இடம் பெற்றிருக்கும். திரிகூட மலையின் வளத்தினை இந் நூலில் இதன் ஆசிரியர் வருணித்திருக்கும் காட்சிக்கு ஏற்பவே அமைந்துள்ளமை அறிந்து மகிழத் தக்கதாம். ஆண் குரங்குகள் பலவகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்து மந்திகளோடு தழுவி விளையாடும்; அக் குரங்குகளால் சிதறி யெறியப்படும் பழங்களை வானுலகில் வாழும் தேவர்கள் இரந்து கேட்டு நிற்பர்; வானத்தில் வாழும் கானவர்கள் தம் கண்களால் ஏறெடுத்து நோக்கித் தேவர்களை அழைப்பர்; வானின் வழியே செல்லும் சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி தரும் மூலிகைகளை வளர்ப்பர்: தேன் அருவியானது அலைகள் மேலெழுந்து வானத்தினின்றும் வழிந்து ஒடும். அவ்வருவி ஒட்டத்தினால் ஞாயிற்றின் தேரிற் பூட்டிச் செல்லும் குதிரைக்கால்களும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழும்: இக் குற்றால மலையில் பிறைசூடிய பெம்மான் உறைகிறான்; அதுவே எம் சொந்த மலை’ எனப் பெருமையுடன் கூறிக் கொள்கிறாள் குறத்தி.

r : - வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும். கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்

கவன சித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/136&oldid=554132" இலிருந்து மீள்விக்கப்பட்டது