பக்கம்:காரும் தேரும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர் தூங்கும் குற்ருலம் 135

தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்

- செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும். கூனவிளம் பிறைமுடித்த வேணி அலங் காரர்

குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.

மேலும் சுழித்து ஒலித்து ஒடும் அலைகளையுடைய அருவி, செல்லும் வேகத்தில் கழங்காடுவது போன்று முத் துகளை ஒதுக்கிச்செல்லுவதோடு, மக்கள் வாழும் வீட்டின் முற்றங்களிலெல்லாம் பரவிச் சென்று சிறுமிகளின் சிறிய மணல் வீடுகளை அழித்துக்கொண்டு ஒட்டம் பிடிக்கின்றன.

முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும் o முற்றம் எங்கும் பரந்துபெண்கள் சிற்றிலைக்கொண்டோடும்

செழுங்குரங்கு தே மாவின் பழங்களைப் பந்தடிக்

கின்றது: தேனலரும் சண்பகவாசம் வானுலகில் எட்டி

மணக்கின்றது. காகம் அணுகாத மலையில் மேக நிரை சாய்கின்றது. -

இவ்வாறு பிற்காலக் கவிஞராம் திரிகூட ராசப்பக் கவிராயர் வருணிக்கும் குற்ருல மலையின் கோலக்காட்சி

கள் தேவாரப் பதிகத்தில் வந்துள்ள காட்சிகளோடு ஒத்

துள்ளன.

  • - - -

திருக்குற்றால மலையினின்று இழிந்து ஒடும் ஆறு சிற்றாறாகும். வளம் நிறைந்த இச்சிற்றாற்றின் துறை யொன்றில்-எருமைகள் கூட்டமாக இருக்கின்றன; அது போது கன்றை நினைந்து பாலைச் சொரிகின்றன. அந்தப். பாலினை வாளை மீன்கள் வாயாரப் பருகி அளவிற்கு: மீறிய உவகையைப் பெறுகின்றன. அந்த உற்சாகத்தின் உந்தலில் கரையிலுள்ள சிறிய பலாமரத்தின் மீது பாய் கின்றன. அதனால் பலாப்பழம் உதிர்ந்து வாழையின்: மேல் விழுகிறது. வாழைமரம் ஒடிந்து செழித்த தாழை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/137&oldid=554133" இலிருந்து மீள்விக்கப்பட்டது