பக்கம்:காரும் தேரும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 காரும் தேரும்.

யைத் தாக்குகிறது. தாழைமடல் விழுந்து தன் மகரந்தத் தோடு கூடிய பூக்களைச் சோறுபோல் சொரிகின்றது. வந்த விருந்தினர்க்கு வகைபெற விருந்தோம்புவது போன்று சோற்றுக்கு இலை போடுவதுபோல வாழை தன் இளங் குருத்துகளை நீட்டுகின்றது. முன்னர் மலைவளத்தினை மாண்பு பெறக்கூறிய குறத்தி இவ்வாறு நாட்டு வளத்தினை நயமுற விளக்குகின்றாள்: - -

சூழ மேதி இறங்குங் துறையிற்

சொரியும் பாலைப் பருகிய வாளை கூழை வாசப் பலாவினிற் பாயக்

கொழும்ப லாக்கனி வாழையிற்சாய வாழை சாய்ந்தொரு தாழையில் தாக்க

வருவி ருந்துக் குபசரிப் பார்போல் தாழை சோறிட வாழை குருத்திடும்

சந்த்ர சூடர்தென் ஆரியங்ாடே.

இத்தகு சிறந்த நாட்டை விட்டுச் செல்வதாகக் காணக் கிடப்பது பூக்களைச் சுமந்து வரும் நீரையுடைய புது வெள்ளமே; அடங்கி அமைதியுடன் இருப்பது யோகஞ் செய்வார் தம் உள்ளங்களே எனக்கூறுமுகத்தான் நாட்டின் வளமும், அந்நாட்டில் துலக்கமுறும் அமைதியும் தெற்றென. விளக்கமுறுகின்றன. ==

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

இத்தகு தெய்வீகம் நிறைந்த நாட்டிலே அமைதியும் ஆனந்தமும் அருவியும் ததும்பும் அழகான இடத்திலே கோயில் கொண்டுள்ளார் குறும்பலா ஈசர்; அவர் முனிபர வும் இனியார்; வேத முழுப்பலாவின் கனி, கனியில் வைத்த செந்தேன்; குறும்பலாவின் முளைத்தெழுந்த தவக் கொழுந்து; அனைத்தினும் மேலாகச் சீரிய தமிழ் மாலைக் குட் செல்வர் குற்றாலத்தீசர் என்பதாம். இவர் சாட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/138&oldid=554134" இலிருந்து மீள்விக்கப்பட்டது