பக்கம்:காரும் தேரும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர் துரங்கும் குற்றாலம் 137

நிற்கும் அண்டமெலாம் சாட்டையிலாப் பம்பரம் போல்: ஆட்டுவிக்கும் அண்ணலராக விளங்கி அடியவர்தம் மன மாசுகளைக் களைவிக்கின்றார். இத்தலத்து உறையும் இறைவனின் திருப்பெயர் குறும்பலா நாதர்; இறைவி யாரது திருப்பெயர் குழல்வாய் மொழியம்மை. இத்தலத் தில் இறைவன் திருநடஞ்செய் சித்திர சபை ஒன்றுள்ளது; இச்சித்திர சபையில் அம்பலவாணன் அருட்கூத்து நிகழ்த்த, உமையம்மையார் தாளங்கொட்டி நின்று கண்டு களித்தனர் என்பது புராண வரலாறு. மேலும் திருக்குற்றாலப் புரா

னத்தில் வரும்,

-

புந்தியுற கினைத்தார்க்கே

அருணகிரி புலியூர் தரிசனைக்கே பேறு

நந்துதவழ் திருவாமூர் பிறந்தார்க்கே யிறந்தார்க்கு நல்குங் காசி

எங்தையாற் றிருவருளாற் பிறந்தார்க்கு

மிறந்தார்க்கும் எதிர்கண் டார்க்கும்

சிந்தையுற கினைந்தார்க்கும் அழியாத கதிகொடுக்குங் திருக்குற் றாலம்

-தலமகிமை, செய்யுள் : 18

என்ற செய்யுள் கொண்டு, நினைத்தாலே முக்தியளிக்கும் தலம் திருவண்ணாமலை என்றும், தரிசித்தாலே முக்தி யளிக்கும் தலம் சிதம்பரம் என்றும், பிறந்தாலே வீடு நல்கும் தலம் திருவாரூர் என்றும்; இறந்தாலே முக்தி யளிக்கும் தலம் காசி என்றும், பிறந்தார்க்கும், இறந்தார்க் கும், கண்டார்க்கும், கருதினார்க்கும் கதி கொடுக்குந் தலம் திருக்குற்றாலம் என்றும் தெரியவருகின்றோம். பிற தலங்களிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்து பெறும் பலனைக் குற்றாலத் தலம் ஒராண்டில் தரவல்லது என்றும், திரிகூடம் கண்டவர்க்குத் தீராத வினையில்லை, யென்றும் வழங்கும் மொழிகள் கொண்டு இத்தலத்தின் சிறப்பினை அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/139&oldid=554135" இலிருந்து மீள்விக்கப்பட்டது