பக்கம்:காரும் தேரும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 காரும் தேரும்

உண்டா லம்மஇவ் வுலகம்; இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே, முனிவிலர்; துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சி புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்! அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்றாள் _* பிறர்க்கென முயலுகர் உண்மை யானே.

-புறநானுாறு: 182

சேரச் சேரச் சேர்ப்பதில் ஆசையாம்' என்றும், அகில மெல்லாம் அரசாண்டாலும் ஆசைக்கோர் அளவில்லை’ என்றும் பெரியோர் கூறுவர். தமக்குக் கிடைத்தவற்றைப் பிறருக்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்வாகும்:அறநூல்களில் உணர்த்தப்படும் அறங்களில் தலையாய அறம் பகுத்துண்டு வாழும் பண்பாடேயாகும். இதனைத் திருவள்ளுவர்,

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாங் தலை.

-திருக்குறள்: 322

என்று அழகுபடக் கூறியுள்ளார். பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் வறுமையில் வாடி, நொந்து, தம் வறுமை தீரக் குமண வள்ளலை நாடிச் சென்றார், அவ் வள்ளலும் வளத்தினை வாரி வழங்கினான். அதனைப் பெற்றுத் தன் வீடு திரும்பிய புலவர் நேற்று நிலவிய வறுமைத் துன்பத்தை மறந்து, நாளைக்கும் அப்பொருள் வேண்டுமே என்ற நினைவிற்கும் இடங்கொடாமல், தன் மனைவியை விளித்துப் பின்வருமாறு கூறுகின்றார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/14&oldid=553992" இலிருந்து மீள்விக்கப்பட்டது