பக்கம்:காரும் தேரும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'138 காரும் தேரும்

இத்தெய்வத் தலத்தினைத் திருநாவுக்கரசரும் மாணிக்கவாசகரும் பாடியுள்ளனர். ஆனால் அவர்கள் பாடல்களில் இயற்கை கொலு வீற்றிருக்கும் கவினுறு குற்றாலமாக இத்தலத்தினைக் காண முடியவில்லை. மாறாக வாழ்க்கையின் நிலையாமையினை வற்புறுத்திப் பிறவிப்பிணி தீர்க்கும் பெம்மான் குற்றாலத் துறையும் கூத்தனே என்பதனை அவர்கள் பாடல்கள் அறிவுறுத்து கின்றன.

இவ்வுலகில் நிலையாக நிலைத்திருப்பது நில்லாமையே ஆகும். தொல்காப்பியனார் புறத்திணையியலில் நிலை யாமை குறித்த தம் கருத்தினைப் பின்வருமாறு புலப் படுத்தியுள்ளார். .." .

பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும் கில்லா வுலகம் புல்லிய நெறித்தே

என்றும்,

மாற்றருங் கூற்றம் சாற்றிய பெகுமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்

என்றும்,

மலர்தலை யுலகத்து மரபுகன் கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்து

என்றும் அவர் குறிப்பிட்டுள்ளமை இவ்வுலகின் இயல்பினை உள்ளவாறே உணர்த்துகின்றன. இதனைப் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புறநானூற்றுப் புலவர் மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே என்றும், திருவள்ளுவர் ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்ப தொன்றில் என்றும், 1 - " " -

o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/140&oldid=554136" இலிருந்து மீள்விக்கப்பட்டது