பக்கம்:காரும் தேரும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர் துரங்கும் குற்றாலம் 139

நெருகல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு

-திருக்குறள் : 336

என்றும் குறிப்பிட்டுள்ளனர். "நில்லாமை வுலகத்து நிலைமை என்று நிலையாமையினைப் பொருநராற்றுப் படையும் பெரும்பாணாற்றுப் படையும் விளக்கியுள்ளன. நிலையாமையினை நாலடியாரில் வந்துள்ள ஒரு பாட்டு நயமுற விளக்குகின்றது :

புல் நுனியின் மேல் நிற்கும் நீர்த்துளி போன்றது யாக்கை நிலையாமை என்று கருதி, இப்பொழுதே அற வினையை ஆற்றவேண்டும்; ஏனெனில் இப்பொழுது தான் ஒருவன் இங்கே நின்றான், இருந்தான், படுத்தான், உடனே தன் உறவினர் அலறி அழும்படி இறந்து விட்டான் என்று உலகத்தில் சொல்லப்படுகின்றது' என்று கூறும் நாலடியாரின் பாடல் வருமாறு: -

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை-இன்னினியே கின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள் அலறச் சென்றான் எனப்படுத லால். o

-நாலடியார் : 29

தவமுனிவராம் திருமூலர் யாக்கை நிலையாமையினை உணர்த்தும் முறை உள்ளத்தில் தெற்றெனப் பதியும் வண்ணம் அமைந்துள்ளது. மனைவியைக் கணவன் அறு சுவை உணவு ஆக்கச் சொன்னான். அவளும் அவ்வாறே தன் காதற் கொழுநனுக்கு அன்புடன் ஆக்கி அவனுக்குப் பரிமாறினாள். உணவு உண்டபின் அவன் மனைவியுடன் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டே இருக்கும்போது இதயத் தின் இடப்பக்கமாகச் சிறிது நோகின்றதென்று சொன்

|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/141&oldid=554137" இலிருந்து மீள்விக்கப்பட்டது