பக்கம்:காரும் தேரும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-140 காரும் தேரும்

னான். கீழே படுத்தான் படுத்தவன் படுத்தவனே, அவன் தீர்ந்தான்' என்று வாழ்வின் அன்றாட நிகழ்ச்சியொன்றின் வழியே இவ்வுடலின் நிலையாமையினை உணர்த்து கின்றார்:

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை யுண்டார். மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப் பக்க மேஇறைநொந்த தென்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிங் தாரே.

-திருமந்திரம்: 192

இத்தகைய வாழ்வின் புன்மையை எண்ணியே திருநாவுக் கரசர் தாம் இயற்றிய திரு அங்கமாலையில்,

உற்றார் ஆருளரோ-உயிர்

கொண்டு போம்பொழுது

குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு

உற்றார் ஆருளரோ

என்று அறவுரை கூறியுள்ளார். பொருள் கொடுத்தாலும் கூற்றுவன் நம்மை விட்டுச் செல்லமாட்டானன்றோ! உற்றாரும் பெற்ற பெயரும் கூடக் கூற்றுவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை அல்லவா? எனவேதான் மணிவாசகப் பெருந்தகை, --

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்

- வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே

-திருவாசகம், திருப்புலம்பல் : 8

என்று குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தனை நோக்கிக் கன்றை ஈன்ற ஆப்போன்று கதறியழ வேண்டுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/142&oldid=554138" இலிருந்து மீள்விக்கப்பட்டது