பக்கம்:காரும் தேரும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர் துரங்கும் குற்றாலம் 141

புலம்புகின்றார் . வற்றா வட அருவியானைத் திரிகட் ராசப்பர் குறிப்பிடும் கூற்றிலும் இவ்வாழ்க்கைத் தத்துவம் பொதிந்துள்ளது. --

சுற்றாத ஊர்தோறும் சுற்றவேண்டாம் புலவீர் குற்றாலம்என் றொருக்கால் கூறினால்.

பிறவிப் பிணியாகிய நோயைத் தவிர் ப்ப்தற்கு வள்ளுவர் கூறும் வழி இதுவாகும். அதுவே பற்றினைத் துறந்து பரமன் அடியினைச் சேர்வதாகும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

-திருக்குறள் : 350

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

-திருக்குறள் : 1.0

என்றும் அவர் கூறியுள்ளமை காண்க.

இவ்வாறு திருக்குற்றாலத்தினை எண்ணுகின்ற பொழுது இயற்கையின் கவின்மிகு காட்சிகளும், அதன் ஊடே ஒளிரும் வாழ்க்கையின் சீரிய தத்துவமும் தெற் றெனப் புலனாகும், குற்றாலத்தின் நெஞ்சை அள்ளும் கண்கொள்ளா வனப்பினனக் கவிதையில் கண்டு மகிழும் நெஞ்சம், அக் கவிதையில் உணர்த்தப்பெறும் நிலை யாமைத் தத்துவத்தினை அறிந்து வாழ்வின் வெற்றி யினை உணர்கின்றது. சங்ககாலக் கவிஞர்கள் இயற் ைக யின் இனிய காட்சிகளின் பின்னணியில் மக்கள் வாழ்வினை வடித்துக் காட்டினர். இடைக்காலத்தில் சமய குரவர்கள் இயற்கைச் சூழலின் இனிமையில் வாழ்க்கையின் தத்துவத் தினை வகையுற எடுத்து மொழிந்தனர். திரிகூடராசப்பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/143&oldid=554139" இலிருந்து மீள்விக்கப்பட்டது