பக்கம்:காரும் தேரும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 காரும் தேரும்

கவிஞர் போன்ற பிற்காலக் கவிஞர்கள் தம் கவிதைகளில் இயற்கை, வாழ்க்கை, தத்துவம் ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டினர். இதனால் காலங் கடந்து வாழும் கவிதைகளில் வாழ்க்கைக்கு வேண்டிய கருத்துகள் வகையுற உணர்த்தப் படுகின்றன என்பது போதரும். அக் கருத்துகளைத் தேர்ந்து தெளிந்து, வாழ்வின் நிலையினை உணர்ந்து, நல் வாழ்வு வாழ நமக்கு உறுதுணையாக வழிகாட்டி நிற்பன

குளிர் தாங்கும் குற்றாலம் பற்றிய கவிதைகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/144&oldid=554140" இலிருந்து மீள்விக்கப்பட்டது