பக்கம்:காரும் தேரும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 13

உனக்கு விருப்பமானவர்களுக்கும், உன்னை விரும்பியவர் களுக்கும், கற்பிற் சிறந்த உன் உறவினர்க்கும், வறுமைக் காலத்தில் உனக்கு உதவியவர்களுக்கும், மற்றும் எவர்க்கும் இவ்வளவு தான் என்று வரையறை செய்யாது, பொருள் வழங்குதலில் அவ்வப்போது வந்து என் கருத்தினைக் கேட்டுக் கொண்டு மிராது, பழந்துளங்கு முதிரமலைக்குத் தலைவனாகிய குமணவள்ளல் வாரியளித்த செல்வத்தை, இப் பொருளைச் சேமித்து வைத்து, நாளைக்கு நாம் வாழ்வோம் என்ற எண்ணத்திற்கும் இடங் (וייתו)יו"מ/ கொடாமல் எல்லோர்க்கும் வாரி வழங்குவாயாக. இவ்வாறு கூறும் பெருஞ்சித்திரனாரின் பண்பட்ட மன நிலையினை எண்ணி எண்ணி வியக்கின்றோம். அவ்வழகிய பாடல் வருமாறு:

கின் நயந்து உறைகர்க்கும் நீ நயந்து உறைார்க்கும் பன் மாண் கற்பின் கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழகின் நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே! பழந்துங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.

-புறநானுாறு: I 5.3.

மேற்கூறிய இவ்விரண்டு புறநானூற்றுப் பாடல்களின் உட்பிரிவாக-சாரமாக இலங்குவதுதான்,

பழியஞ்சிப் பாத்துண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

-திருக்குறள்: 44.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/15&oldid=553993" இலிருந்து மீள்விக்கப்பட்டது