பக்கம்:காரும் தேரும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 காரும் தேரும்

என்னும் குறளாகும். இக்காலத்தில் சிலர் கொடை வழங்குதல் என்பது விளம்பர நோக்கிற்காகவும் மற்றும் வேறு பல நோக்கிற்காகவும் அமையக் காணலாம். மேலும் பலர் இந்தப் பிறவியில் அறம் செய்தால் மறுபிறப்பில் பலனடையலாம் என்ற எண்ணத்திலும் அறம் செய்வதுண்டு. ஆய் அண்டிரன் என்னும் குறுநில மன்னன் அவ்வாறின்றி அறத்தினை அறத்திற்காகவே மறுமை நோக்கின்றிச் செய் தான் என்று புறநானுாறு கூறும்:

இம்மைச் செய்தது மறுமைக் காம்எனும் அறிவிலை வணிகன் ஆய் அலன்.

-புற நானுாறு 13 4: 1-2.

மேலும், தேய்தலும் பெருகலும், மாய்தலும், பிறத்தலு மாக உள்ள சந்திரன், வாழ்வெனப்படுவது மேடுபள்ளங் களை, இருள் ஒளியினை, நன்மை தீமைகளைக் கொண்டது என்பதனை அறியாதோரையும் அறியக்காட்டி நிற்கிறது:

தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் அறியா தோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் உலகம்

- புறநானுாறு; 27; 11-14 .

  • *

இத்தகு நிலையில் வாழ்தலை இனிதாகவும் கொள் ளாமல், ஒர் வெறுப்பு வந்தவிடத்து இனிமையற்றுக் கொடுமை உடையதாகவும் கருதாமல், சமநோக்கோடு , கருதி நம் கடப்பாட்டினைச் செவ்வனே ஆற்றிவர வேண்டும், இதற்கும் வாழ்வில் வரும் தீதினையும் நல்ல தனையும் ஒன்றாக எண்ணுதலோடு, நோதலும். தணி தலும், சாதலும் பிறந்த போதே மூலத்தே முடிந்த ஒன்றாகக் கருத வேண்டும் என்பதும், பேராற்றின் பெரு வெள்ளத்தின் வழிச் செல்லும் புணை போன்று, உயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/16&oldid=553994" இலிருந்து மீள்விக்கப்பட்டது