பக்கம்:காரும் தேரும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 15

வழின் முறைப்படியே இயங்கும் என்பதும், பெரியோரை, வியக்காதிருத்தலும், அதனினும் சிறியோரை இகழாதிருத் தலும் வேண்டும் என்பதும், இவையே எவ்வூரினையும் நம்மூராகவும், எம் மக்களையும் நம் உறவினராகவும் கொள்ளும் உயரிய நெறி' என்பதும், கணியன் பூங்குன்ற ார் என்ற சங்க கால அறச் சான்றோர் நமக்கு அறிவுறுத்தும் பண்பாட்டு மனவமைதிகளாகும். அவர் பாடிய பாடல் வருமாறு:

யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா -- நோதலும் தணிதலும் அவற்றோ ரன் சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னாது என்றலும் இலமே மின்னொடு வானம் தண்டுளி தலைஇ யானாது கல்பொரு திரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே o சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே.

- -புறநானுாறு : 192

| -- - so

இவ்வாறு சம நிலையான நடுவுநிலையான மனத் துடன் வாழும் வாழ்வில் ஏமாற்றம் இல்லை; தோல்வி இல்லை. மேலும் நிலம் பெயர்ந்தாலும் ஒருவன் சொல்லிய சொல்லினின்றும் மாறக்கூடாது என்றும், நீரின்றி இயங்க முடியாத உயிரினங்களுக்கும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவர் என்றும், அறனும் பொருளும் இன்பமும் ஆகிய இம் மூன்றிற்கு முயல்வதே செல்வத்தின் செயலாக இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு செயலாற்றாமை, அச்செல்வத்தினைப் போற்றாமையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/17&oldid=553995" இலிருந்து மீள்விக்கப்பட்டது