பக்கம்:காரும் தேரும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 காரும் தேரும்

ஒக்கும் என்றும், நிலம் பெயர்ந்தாலும் ஒருவன் செய்த உதவியினை ஒரு நாளும் மறத்தலாகாது என்றும், வாழ்தல் வேண்டிப் பொய் கூறாமல் மெய்யே கூறல் வேண்டும் என்றும், செல்வத்தின் பயன் ஈதலிலே உள்ளது என்றும், அச் செல்வத்தைத் தாமே துய்ப்போம் என முயன்றால் துன்பங்கள் பல வந்து தோன்றும் என்றும், கொடு என்று கேட்பது இழிவென்றும் அவ்வாறு கேட்டும் கொடாமை அதனினும் இழிவென்றும், எடுத்துக்கொள் என்று மனமுவந்து ஈவது உயர்ந்தது என்றும், அவ்வாறு கொடுத் தும் அதனைக் கொள்ளாமையே அதனினும் உயர்வுடைத்து என்றும், நல்லது செய்யாவிடினும் கெடுதலாவது செய்யா திருத்தல் எல்லாரும் விரும்புவதும் நல்லாற்றுக்கண் வழிப்படுத்துவதுமான நெறியென்றும் புற.நா னு று பண்பாட்டின் சிறப்பினையெல்லாம் பரக்கப் பேசுகின்றது. பண்பாட்டின் உயிர்நாடியான சில தொடர்களை ஈண்டுக் காண்க: - - -

நிலம் பெயரினும் நின்சொற் பெயரல்

-புறநானுாறு : 3: 1 4

Th

நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

o -புறநானூறு: 18: 18-19 அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும் பெருமகின் செல்வம் ஆற்றா மைங்கிற் போற்றா மையே.

-புறநானூறு: 28: 11-17

கிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி யில்லென அறம்பா டிற்றே. -

-புறநானூறு: 34: 5.7

o ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/18&oldid=553996" இலிருந்து மீள்விக்கப்பட்டது