பக்கம்:காரும் தேரும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 17

வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன் மெய்கூறுவல்

-புறநானூறு 139: 5-6

செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புரு பலவே

-புறநானூறு: 189; 7-8

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று: கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

-புறநானுாறு: 204:1-4

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஒம்புமின். அதுதான் எல்லாரும் உவப்பது அன்றியும் நல்லாற்றுப் படுஉம் நெறியுமா ரதுவே.

-புறநானூறு: 195 : 6-9

இவையன்றியும் அரசர்க் கென்றே சில பண்பாட்டு உண்மைகள் புலவர்களால் அந்நாளில் வலியுறுத்திக் கூறப் பட்டுள்ளன. மக்கட்கு நெல்லும் உயிரன்று நீரும் உயிரன்று: மன்னனே உயிர் என்பதும், அரசனின் கொற்றம் அறநெறியிற் செலுத்தப்படல் வேண்டும் என்பதும், அவன் தம்மவர் என்று கோல் கோடாமலும், பிறர் என்று குணங் கொல்லாமலும், அருளையும் அன்பையும் நீக்கி நீங்கா நரகம்

செல்பவர்களைப் போலில்லாமல் சிறு குழந்தையைக் கவனமாக வளர்ப்பவர் போன்றும், சூரியன் போன்று ஆண்மையும், சந்திரனைப் போன்று மென்மையும்,

மழையைப் போன்று கொடையும், உடையவராய் இருத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/19&oldid=553997" இலிருந்து மீள்விக்கப்பட்டது