பக்கம்:காரும் தேரும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 19

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்

பாணன் சூடான்! பாடினி அணியாள்

  • * * * * * * * * * * * * * * i. | | | | | | | || || || || || ||

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே.

-புறநானூறு: 242

இதுகாறும் புறவாழ்வில் பழந்தமிழர் காட்டிய பண் பாட்டு விளக்கத்தினைக் கண்டோம். இனி, அகவாழ்வில் அவர்தம் மனப்பண்பாடு எவ்வாறு தூய்மையும் செம்மை யும் கொண்டிலங்கியது என்பதனைக் காண்போம்.

மனைவாழ்விற்கு விளக்கமாய்த் திகழ்பவள் மனைவியே, * ssD வாழ்விற்கு ஆடவன் பொருத்தமானவனாய் விளங்கினன். . . "

மனைக்குவிளக் காகிய வாணுதல் கணவன் முனைக்குவரம் பாகிய வென்வேல் கெடுந்த கை.

-புறநானூறு 314: 1-2

இத்தகைய வாழ்வுப் போக்கில் ஆடவனுக்கு அவன் மேறகொண்ட கடமையே-வினையே உயிராகவும், மனை வாழ்வு வாழும் மகளிர்க்கு அவர்தம் கணவரே உயிராக வும் துலங்கினர்.

வினையே ஆடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்

- -குறுந்தொகை: 125: 1-2

காதல் நிலையிலே தலைவியர் பண்பு நலம் பாராட்டப் படுவதாயுளது. ஒரு நாள் தலைவி தன் தோழியரோடு சென்று நெய்தலங்கானலின் வெண்மணலில் விளையாடி னாள். அப்பொது அவ் வெள்ளிய மனலில் புன்னைவிதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/21&oldid=553999" இலிருந்து மீள்விக்கப்பட்டது