பக்கம்:காரும் தேரும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 காரும் தேரும்

யொன்றை ஊன்றிவிட்டு வந்தாள். தான் வேரூன்றி வித்திய புன்னை விதை முளைத்து முளை தோன்றி நிற்பதைப் பின்னொரு நாள் கண்ட தலைவி, அதனை: நோக்கி மிகவும் மகிழ்ந்து, நெய் கலந்த, இனிய பாலை நீராக வார்த்து இனிமையோடு வளர்த்துவரும் அன்னை அவளை நோக்கி நீ வளர்த்துவரும் புன்னை தும்மினுஞ் சிறந்த தன்றோ? அது நும்முடன் பிறந்த தங்கையாந் தகுதி யுடையது' என்று புன்னை மரத்தின் சிறப்பினைப் பொருந்த உரைத்தனள் . ஆதலின் தன்தங்கையாகிய அப்புன்னை மரத்தின் எதிரில் தலைவனோடு நகைத்து விளையாடி மகிழ்ந்திருப்பதற்குப் பெரிதும் நாணினாள் தலைவி. .

இவ்வாறாகப் புன்னையையும் தன் உடன் பிறப்பாக நினைந்து, அதன் எதிரில் தன் நெஞ்சமர் காதலனோடு பேசுவதற்கு நாணிய தலைவியின் காதற்பண்பாடு வியந்து போற்றற்குரியதன்றோ? இப்பண்பாட்டினை,

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை அகைய நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப

நும்மினுஞ் சிறந்தன்று நுல்வை ஆகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே அம்ம காணுகம் நும்மொடு நகையே

-நற்றிணை: 172: 1 - 6

என்று நற்றிணை நயம்பட நவில்கின்றது.

தலைவன் தலைவியரிடையே வளரும் காதல் நிலை பின் கற்புக் காலத்தில் இல்லறத்தில் தலைப்படும் பொழுது அவ் இல்லறத்தினைச் சீர்மைப்படுத்தும் தன்மை வாய்ந்த தாகும். கடிமணம் புரிந்து கொண்டு தலைவனும் தலைவி யும் இல்லறம் நடாத்தும் கடிநகர்க்கு வந்தாள் தோழி. அவர்கள் இல்லறம் எவ்வாறு நடத்துகின்றனர் என்பதனை |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/22&oldid=554000" இலிருந்து மீள்விக்கப்பட்டது