பக்கம்:காரும் தேரும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 21

நேரிற் கண்டுபோக வந்தாள் அவள். தலைவியோ தலைவ உறுக்காகச் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாள் "கட்டித் தயிரைத் தன் காந்தள் விரல்களால் பிசைந்து, நெகிழ்ந்த சேலையினையும் அக் கையாலேயே பற்றிச் சரி செய்துகொண்டு குவளைக் கண்கள் தாளிப்புக் புகையினைக் கொள்ளவும் வருந்தாது தாளிதம் செய்து-தயிர்க்குழம்பு, புளிக்குழம்பு வைத்தாள். கணவன் சாப்பிடும் பொழுது 'இனிது’ எனப் பாராட்டிக் கூறி மகிழ்ந்து உண்டான். இதனைக் கண்ட் தலைவியின் முகத்தில் இளநகை தோன் றியது . இவ்வாறு இன்பமான இல்லறப் பண்பாட்டினைக் கூறும் குறுந்தொகைப் பாடல் வருமாறு:

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழா அ துடீஇ குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர் - இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.

-குறுந்தொகை : 1.67

இத்தகைய குடும்பப் பண்பாடு நிறைந்த பெண் இப் பிறவியில் தனக்கு வாய்த்த கணவனே மறுபிறவியிலும் தனக்குக் கணவனாக அமைய வேண்டும் என்று விரும்பு ன்ெறாள். ്

இம்மை மாறி மறுமை யாயினும் , *

யோ கியரென் கணவனை . . .

யானா கியர்கின் நெஞ்சு நேர் பவளே.

-குறுந்தொகை 49 : 3-5

என்று குறிப்பிடுகின்றாள். பிறிதொரு தலைவி இனிப்

பிறப்பே வேண்டாம், பிறந்தால் காதலனை மறக்க

பவண்டி வந்துவிடுமோ எனக் கவலை கொள்கிறாள்:

vrr-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/23&oldid=554001" இலிருந்து மீள்விக்கப்பட்டது