பக்கம்:காரும் தேரும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

22 காரும் தேரும்

சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவின் பிறப்புப்பிறி தாகுவது ஆயின் மறக்குவேன் கொல்என் காதலன் எனவே.

-நற்றிணை : 397 : 7-9 இன்பத்தில் யாராலும் பங்கு பெறமுடியும்; துன்பத்தில் பங்கு கொள்வதென்பது பலருக்கு அரிதான ஒரு செயல். ஆயினும் சங்க காலத்து மகளிர் பண்பாடு இதற்கு மாறானது. தலைவி தலைவனின் துன்பத்திற்குத் துணை யாக இருப்பதனையே இன்பமாகக் கருதுகின்றாள்.

து -நும்மொடு

துன்பம் துணையாக காடின் அதுவல்லது

இன்பமும் உண்டோ எமக்கு?

-பாலைக்கலி : 6 : 9-11

பொருள்வயிற் பிரிந்து சென்றிருக்கிறான் தலைவன். அவன் வரும் நாளினை எண்ணி எண்ணி வாழ்கிறாள் தலைவி. தன் அழகிய முன்கையிலே கிளியினை ஏந்தி, "தலைவன் இன்று வருவார் என்று சொல்' என்று வீட்டில் உள்ளார் யாரும் அறியாத வகையில் மென்மையான சொற்களை மிழற்றி நிற்கிறாள். நானுடைய தலைவி. இவ்வழகுக் காட்சியினை ஒர் அகப்பாடல் அழகுற உணர்த்தும்:

செந்தார்ப் பைங்சிளி முன்கை ஏந்தி இன்றுவரல் உரைமோ சென்றி.சினோர் திறத்தென இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென மழலை இன்சொல் பயிற்றும் ് நாணுடை அரிவை...... - - - -அகநானுாறு : 34 : 14-18

குடும்பத்தினரும் தன் - கவலையினை அறிதல் வேண்டா எனக் குடும்பப் பண்பாட்டினைக் காக்கும் தலைவியின் அரிய மனநிலை இப்பாட்டால் நமக்கு நன்கு புலனாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/24&oldid=554002" இலிருந்து மீள்விக்கப்பட்டது