பக்கம்:காரும் தேரும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காரும் தேரும்

போரென்ன வீங்கும் பொருப்பன்ன பொலங்

கொள் திண்தோள் மாரன் அனையான் மலர்கொய்திருந் தானை வங்தோர் காரன்ன கூந்தற் குயிலன்னவள் கண்புதைப்ப ஆரென்ன லோடும் அனலென்ன அயிர்த்துயிர்த்தாள்.

-கம்ப : பால : பூக்கொய் : o போரெனில் வீ ங் கு ம் திண்தோளினையுடைய கட்டழகுக் காளை ஒருவன் தன் காதல் தலைவியின் கூந்தலில் சூடும்பொருட்டு ஒரு சோலையில் மலர் கொய்து கொண்டிருக்க, மேகம் போன்ற கூந்தலினையுடைய அவனுடைய காதலி மெள்ள அவன் அறியாது அவன் பின்வந்து அவன் கண்களைத் தன் இரு கைகளாலும் பொத்த, அவன் யார்?’ என்று கேட்ட அளவில் அனல் போலும் பெருமூச்சு விட்டுத் தன் சீற்றத்தினைப் புலப் படுத்தினாள் என்பதாம். இப்பாடலின் கருத்து நுட்பம் உணர்ந்து மகிழ்தற்குரியது. I

இதே கருத்தினையே வள்ளுவரும்,

வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினிர் என்று

  • - -திருக்குறள் : 1.317

தும்முச் செறுப்ப அழுதாள் துமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று

-திருக்குறள் , 13 18

என்று தும்மலில் வைத்துப் புலவி துணுக்கத்தினை நயம்படக் கிளத்திக் கூறுவர்.

இதனையே பிற்காலத்தில் வேதநாயகம் பிள்ளை அவர்கள் பின்வரும் பாடலில் கூறுவர்:

ஓவியள்ே சுவரெழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான் தேவியையான் அழைத்திட ஆண் சித்திரமேல் நான்பாரேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/26&oldid=554004" இலிருந்து மீள்விக்கப்பட்டது