பக்கம்:காரும் தேரும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 25

பாவையர்தம் உருவெனில் நீர் பார்க்கமனம் பொறேன் - H. என்றாள் காவிவிழி மங்கைஇவள் கற்புவெற்பின் வற்புளதால் ான்று வழிவழியாக வரும் கற்பு மேம்பாட்டினைக் கவினுறக் காட்டுவர்.

இலக்கியங்கள்-குறிப்பாகச் சங்க இலக்கியங்கள் வாழ்வின் செம்மைப்பாட்டிற் கியைந்த முறையில் சிறந்த பண்பாட்டுக் கூறுகளைத் தம்மிடையே பொதிந்து வைத்

துள்ளன. நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும் பள்ளமாக இருந்தாலும் மேடாக இருந்தாலும் கவலை யில்லை; அந்நாட்டில் உள்ள மக்கள் மனப்பண்பாடு

நிறைந்தவர்களானால் அந்த நாடு வாழ்ந்துவிடும்' என்று அறிவிற் சிறந்த ஒளவை பிராட்டியார் கூறுகிறார்:

நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.

- -புறநானுாறு : 187 இவ்வாறாக, நந்தமிழ் இலக்கியங்கள் நல்ல பல பண் பாடுகளை நமக்கு உணர்த்தி, நம் வாழ்வு பல்லாற்றானும் வளம்பெற்றுச் சிறக்க இன்றளவும் வழிகாட்டி வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/27&oldid=554005" இலிருந்து மீள்விக்கப்பட்டது