பக்கம்:காரும் தேரும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. யவனரும் தமிழ்நாடும்

தொன்னிலமாம் நன்னிலம் நம் தென்னிலமாம். தமிழ் நிலம். இம் மண் பழையது; மொழி பழமையுடையது; மக்கள் இனம் மிக மிகப் பழமையுடையது. மனித நாகரிகம் எனும் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டிப் பண்பாட்டிக் கண்ணின் இமைபோல் காத்து வளர்த்தவர்கள் தமிழர்கள். அவர்தம் வரலாறு பழமையுடையது; பெருமை

யுடையது; பாராட்டுக்குரியது. உலகின் பிறநாடுகள் நாகரிகம் பெறாததற்கு முன்னால் சீரியசெம்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தமிழர். அவர்தம் வாழ்வு

சீரோடும் சிறப்போடும் துலங்கியமையால்தான் அவர்தம் வாழ்வினைப் பிரதிபலிப்பனபோல் அமைந்த இலக்கியங்கள் துாய்மையும் செம்மையும் பெற்றுத் துலங்குகின்றன. அத்தகு சிறந்த இலக்கியங்களில் சிறக்க முன்னணியில் நிற்பன சங்க இலக்கியங்களாகும். சங்க இலக்கியங்களைப் படிக்கும் பொழுது ஒரு பெருமித உணர்வு தோன்றுதல் இயற்கை, பழந்தமிழர் தம் செம்மாந்த சிறப்பு வாழ்க்கை வடித்தெடுக் கப் பெற்ற வளமான இலக்கியங்களே சங்க இலக்கியங் களாகும்.

இத்தகு பெருமைக்குரிய பழந்தமிழர் வேறு பலநாட் டவரோடும் வணிக, நாகரிகத் தொடர்பு கொண்டிருந் தனர். கிறித்தவ நூற்றாண்டுத் தொடக்கத்திற்குச் சிறிது முன்னும் பின்னும் வரலாற்றுப் பெருமை நிறைந்த இனமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/28&oldid=554006" இலிருந்து மீள்விக்கப்பட்டது