பக்கம்:காரும் தேரும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யவனரும் தமிழ்நாடும். 27

விளங்கியவை கிரேக்க இனமும் உரோம இனமும் ஆகும். இவர்கள் தமிழ் இலக்கியத்தில் பொதுவாக யவனர் என்று குறிப்பிடப் பெறுகிறார்கள். பெரும்பாணாற்றுப் படையின் உரையில் யவனர் என்ற சொல்லிற்குச் சோனகர் என்று பொருள் விரிக்கிறார் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் னிெயர். பின்னர் இச் சொல் துருக்கரையும் அரேபியரை யும் மிலேச்சரையும் குறிக்கவும் வழங்கியது என அறிகிறோம். அயோனியா. கிரீசு, பாக்டீரியா, அரேபியா முதலான நாடுகள் பொதுவாக யவனம் என்று வழங்கப்பட்டுள்ளது என்பதனைத் தமிழ் இலக்கியம் பயில்வோர் உணர்ந்து கொள்வர். யவனர்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கிங்களில் ஏறத்தாழப் பத்து இடங்களில் வருகின்றன. சங்க இலக்கியங்களை அடுத்துத் தோன்றிய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களிலும் பிற் காலக் காவியங்களான சீவகசிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி முதலிய நூல்களிலும் யனவரைப் பற்றிய செய் விகள் விரவி வந்துள்ளன. - - - - 1 -

யவனர்கள் தமிழ் நாட்டோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்குத் தமிழ் இலக்கியச் சான்று அளும் வரலாற்றாசிரியர்கள் எழுதிவைத்துள்ள குறிப்புகளும் நிறைய உள்ளன. இச்செய்திகள் குறித்துச் சிறிது ஈண்டு

விரிவாகக் காண்போம்.

.ெ மு. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக வரலாற்று அறிஞர்கள் கூறும் சாலமன் என்னும் வேந்தனுக்குத் தமிழ் நாட்டிலிருந்து மரக்கலங்கள் வயிலாக மயிற்பீலி, யானைத் அந்தம், நறுமணப் பொருள்கள் முதலியன அனுப்பப் பெற்றன. மயிலைக் குறிக்கும் தோகை என்னும் தமிழ்ச் சொல் ஈபுரு மொழியில் துகி’ என்று ஆனது. அதேபோன்று _அல்ெ என்ற நறுமணப் பொருள் அகல்' என்றானது. பொளியெர்கள் சேரநாட்டு மிளகினை மிகவும் விரும்பித் தம் கப்பல்களில் ஏற்றிச் சென்றனர். பாரசீகத்திற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/29&oldid=554007" இலிருந்து மீள்விக்கப்பட்டது