பக்கம்:காரும் தேரும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 காரும் தேரும்

ஆப்பிரிக்காவிற்கும் அழகிய எருதுகள் இங்கிருந்து அனுப்பப் பட்டன. கி. மு. முதல் ஆயிரம் நூற்றாண்டிலேயே பிலிப் பைன்ஸ் தீவுக்ளோடு வணிக உறவு இருந்திருக்கவேண்டும் என்பது தெரியவருகிறது. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் பெயர் பெற்ற பாபிலோன் நகரத்திற்குத் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட அரிசி, சந்தனம், மயில் முதலிய பொருள்கள் தமிழ் மொழிப் பெயர்களாலேயே அங்கும் வழங்கப்பட்டன. தமிழ் அரிசி, கிரேக்க மொழியில் ஒரிசி ஆனது. சந்தனம் "சாண்டல் ஆனது. மயிலை உணர்த்தும் தமிழ்ச் சொல் லாம் தோகை துகி ஆனது. இஞ்சிவேர், சிக்கி பெரஸ்’ என்றும் பிப்பிலி: பெப்பரி என்றும் வழங்கின. இவை யெல்லாம் பழந்தமிழர் கடல் வாணிகத் துறையில் கண்ட வெற்றிச் சிறப்பினை வெளிப்படுத்துவனவாகும்.

பர்மா, மலேயா, சீன நாடுகளோடும் தமிழர் வாணிகம் நடைபெற்றது என்பதற்குச் சான்றுகள் உண்டு. யூதர், பொனிசியர் முதலானோரும் வணிகத் தொடர்பு கொண் டனர். கி. மு. ஆறாம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் வணிகப் பெருநகரமாய்த் துலங்கிய பாபிலோன் நகரில் இங்கிருந்து சென்ற வணிகர்கள் குடியேறி வாழ்ந்தனர். உரோமப் பேரரசனான அகஸ்டஸ்ஸை கி. மு. 21-ஆம் ஆண்டில் பாண்டிய அரசனிடமிருந்து ஒரு வணிகர் துTதுக்குழு சென்று கண்டது. இதன் விளைவாக இரு நாடு களுக்கிடையிலும் வணிகம் செழித்தோங்கியது. உரோம வணிகர்கள் தமிழ் நாட்டு முத்து, யானைத்தந்தம், மஸ்லின் ஆடை, மிளகு முதலிய பொருள்களை மிகுந்த விலை கொடுத்து வாங்கி, ஒன்றுக்கு நூறு விலை வைத்துத் தங்கள் நாடுகளில் விற்றனர். இதனால் ஆண்டொன்றுக்கு உரோம நாடு பண்ட மாற்றாக ஆறு லட்சம் பவுன் தமிழகத்

திற்குத் தந்தது. உரோமாபுரிச் செல்வச் சீமாட்டிகள்

தென் பாண்டி முத்துகளை அணிவதில் பெருவிருப்புக் காட்டிப் பெரும்பொருள் செலவழித்தனர். இந்த ஆடம்பர வேட்கையால் உரோம நாட்டின் பொருளாதார நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/30&oldid=554008" இலிருந்து மீள்விக்கப்பட்டது