பக்கம்:காரும் தேரும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யவனரும் தமிழ்நாடும் - 29

தாழ்வுற்றது. எனவே அந்நாட்டுத் தலைவர்கள் இச் செயலினைக் கண்டித்துக் கூறினர்.

இத்தகைய செய்திகள் தமிழர் கடல் வாணிகத்தில் பெற்ற பெருவெற்றியை விளம்பரப்படுத்துகின்றன. பெரிப்ளுஸ் என்னும் நூலினை, கி. பி. 60-ல் எழுதிய ஆசிரியர் சேரநாட்டுத் தொண்டி, முசிறி, குமரி, சோழ வளநாட்டுக் காவிரிப்பூம்பட்டினம், பாண்டி நாட்டுக் கொற்கை முதலிய துறைமுகங்களை நேரிற் கண்டு பிறந்த குறிப்புகளை எழுதிவைத்துள்ளார். கி. பி. 150ஆம் ஆண்டில் வாழ்ந்த தாலமி என்பவர் பெரிப்ளுஸ் ஆசிரியரை விட மேலும் சிறந்த விவரங்களைக் கொடுத் துள்ளார். .ெ த .ா ண் டி. , முசிறி, கொட்டாரக்கரை, கோட்டயம், பொரக்காடு, கருவூர், மதுரை, உறையூர், பொதுகா (புதுச்சேரி), சோபட்டணம் (மரக்காணம்), மாவிலங்கை, குமரி, கொற்கை, நாகப்பட்டினம், காவிரிப் பூம்பட்டினம், மோகூர், கோடிக்கரை முதலிய நகரங்களை அவர் தம் நூலில் குறித்துள்ளார்.

தாலமி என்னும் வரலாற்றாசிரியர் குமரி, கொற்கை, முசிறி, நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், புதுச்

The extravagant importation of luxuries from the wost without adequate production of commodities to offer in exchange, was the main cause of the successive depreciation and degradation of the Roman currency loading finally to its total repudiation...... So that Pliny complained in 70 A. D. that India drained gold to the value of nearly a million pounds a year giving bake her own wares, which are sold among as at fully a hundred times their first cost.

—P. T. Srinivasa ly engar,—History of the Tamils = Р. 305 8 308,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/31&oldid=554009" இலிருந்து மீள்விக்கப்பட்டது