பக்கம்:காரும் தேரும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காரும் தேரும்

சேரி, மரக்கானம் முதலிய தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களைப் பற்றிய செய்திகளைத் தம் நூலில் விவரமாகக் குறித்துச் சென்றுள்ளார். மதுரை மாநகரிலும் ©h ©aᏗ ❍ ᏞᏞ! ஆற்றுப்படுகையிலும் கிடைக்கும் எண்ணற்ற உரோமச் செப்பு நாணயங்களைக் கொண்டு யவனர் பலர் மதுரையில் தங்கி வாழ்ந்தனர் என அறியலாம். சேர நாட்டுக் கடற்கரையில் யவனக் குடியிருப்பு ஒன்றும், அகஸ்டஸ்-க்கு ஒரு கோயிலும், இக்காலப் பாண்டிச் சேரிக்கு அண்மையில் உள்ள அரிகாமேடு பகுதியில் யவனக் குடியிருப்பு ஒன்றும் இருந்திருக்க வேண்டும் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஆர்க்கிமிடீஸ் என்ப வர் சைரக்யூஸில் உரோமரது முற்றுகையை எதிர்க்கக் கண்டுபிடித்த பலவகை இயந்திரங்கள் யவனப் பொறிகள்' என்ற பெயரில் தமிழ்நாட்டுத் தலைநகரங்களின் கோட்டை களில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட இவை யனைத்தும் யவனர் தமிழகத்தோடு கொண்ட வணிக, நாகரிக உறவினை வலியுறுத்துவனவாம்.

இனி, இச் செய்திகளுக்கான தமிழ் இலக்கியச் சான்று

களைக் காண்போம்.

முதலாவதாக, யவனர் தமிழ் அரசர்தம் மாவ்ரிகை யில் வாயிற்காப்பாளராக விளங்கினர் என்பதனை முல்லைப் பாட்டு கொண்டு அறியலாம். குதிரையை அடிக்கின்ற சம்மட்டி வளைந்து கிடக்கின்ற உடையினை யும், அச்சம்மட்டி மறையும்படி வடிம்பு தாழ்ந்து பெருக்குஞ் செறிதலையுடைய சட்டையினையும் அணிந்து பார்வைக்கு அச்சம் தருவோராய்-இயல்பான வலி கூடிய உடம்பினையுடையராய்-யவனர் தோற்றமளிக்கின்றனர். புலிச் சங்கிலி விடப்பட்ட அழகிய சிறந்த அரச மாளிகை யினை அவர்கள் காத்து நிற்கின்றனர்.

மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவருங் தோற்றத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/32&oldid=554010" இலிருந்து மீள்விக்கப்பட்டது