பக்கம்:காரும் தேரும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யவனரும் தமிழ்நாடும் 31.

வலிபுணர் யாக்கை வண்கண் யவனர் புலித்தொடர் விட்ட புனைமாண் கல்லில்

-முல்லைப்பாட்டு : 59-62 மேலும் சிலப்பதிகாரத்தில்

கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர். . . * -

- - -சிலப்பதிகாரம் 14 : 66-67

என வரும் குறிப்பும் சான்று பகரும். ി

இந்த யவனர்கள் கைத்தொழில் ஆற்றல் மிக்கவர்கள். இவர்கள் அன்ன விளக்கினையும் ((Swan-Shaped), பாவை விளக்கினையும் (Woman-Shaped) slógos šEsbG 3; தந்தார்கள். இதனை, - கேள்வி யங்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் துாணத் தகைஇ யவனர் ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட வைகுறு மீனிற் பையத் தோன்றும்

-பெரும்பாண் : 315-318

--

--

என்று பெரும்பாணாற்றுப்படையும்,

யவனர் இயற்றிய வினைமாண் பாவை கையேந் தைய கல் நிறையகெய் சொரிந்து பருஉத்திரி கொளீஇய குரு உத்தலை நிமிரெரி அறுவறு காலைதோறும் அமைவரப் பண்ணி பல்வேறு பள்ளிதோறும் பாயிருள் நீங்க

. * -நெடுநல்வாடை : 101-105

என்று நெடுநல்வாடையும், - -

வேண்டிடங் தோறும் தூண்டுதிரிக் கொளிஇக் கைவயிற் கொண்ட நெய்யகல் சொரியும்

யவனப் பாவை யணிவிளக் கழல

-பெருங்கதை : 1: 47 : 173-175

என்று பெருங்கதையும் குறிப்பிடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/33&oldid=554011" இலிருந்து மீள்விக்கப்பட்டது