பக்கம்:காரும் தேரும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 காரும் தேரும்

யவனர்கள் வலிமிக்கவர்கள் என்றும், தேறல் மாந்தி மகிழ்சிறந்து, பொழியும் மழைத்துளியினையும் பொருட் படுத்தாது மதுரை நகர வீதிகளில் திரிந்தனர் என்றும் நெடுநல்வாடை மேலும் குறிப்பிடுகின்றது, -

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் | யாறு கிடந்தன்ன அகன்கெடுங் தெருவில் படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்து இருகோட் டறுவையர் வேண்டுவயின் திரிவர

-நெடுநல்வாடை 29-35

யவனர்கள் சேரநாட்டுத் துறைமுகப்பட்டின மாய் விளங்கிய முசிறித் துறைமுகத்திற்குக் கப்பல்களில்வந்த னர். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான மிளகினைக் கப்பல் கப்பலாக வாங்கிச் சென்றனர்;. யவனப் பிரியம்’ என்றே மிளகிற்குப் பெயரிட்டனர்; அதற்கீடாகப் பொன் தந்து சென்றனர்.

. . . . . . . .சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்னுரை கலங்க யவனர் தங்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி

-அகநானூறு : 149 : 7-11

இவ்வாறு அகநானூறு குறிப்பிடுகின்றது. கலங்களில் வந்த பொன்னை மூங்கில் தெப்பத்தின் உதவியால் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்து, மலைபடு பொரு வளினையும், கடற்படு பொருளினையும் சேரன் வருநர்க்கு வாரி வழங்கியதாகப் புறநானுாற்றுப் பாடல் ஒன்றில், வரலாற்றுச் செய்தியினைத் தம் பாடலில் தவறாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/34&oldid=554012" இலிருந்து மீள்விக்கப்பட்டது