பக்கம்:காரும் தேரும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யவனரும் தமிழ்நாடும் 33

வைத்துப் பா டி ேய வழக்கப்பட்டுப்போன பரணர் பாடியுள்ளார்.

கலந்தந்த பொற்பரிசம்

கழித்தோணியாற் கரைசேர்க்குங்து

மலைத்தாரமுங் கடற்றாரமும்

தலைப்பெய்து வருங்ர்க்கீயும்

புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்.

-புறநானுாறு : 343 : 5-9

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன் மாறனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடும் புறப்பாடல் ஒன்று கொண்டு, யவனர் மதுச் ாடிகளைக் கொணர்ந்து தமிழ் மன்னர்களுக்குத் தந்த தனையும், அதனைப் பொற்கலத்தில் அழகு மகளிர் அவர் களுக்கு நாள்தோறும் தர அவர்கள் அதனைக் குடித்து மகிழ்ந்தனர் என்ற செய்தியினையும் அறிகிறோம்.

யவனர், நன்கலம் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனைகலத் தேக்தி நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து ஆங்கினிது ஒழுகுமதி.

-புறநானூறு : 56 : 18-21

மேலும் சிலப்பதிகாரம் கொண்டு மதுரைக்கோட்டை மதில் மீது, வளைந்து தானே எய்யும் எந்திரவில்லும், கரிய விரலையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறியும், கல்லையுமிழும் கவனும், காய்ந்திறைத்தலாற் சேர்ந்தாரை வருத்துவதாய நெய்யும், செம்புருக்குமிடா வும், உருகக் காய்ச்சியெறிதற்கு எஃகுபட்டிருக்கும் உலை களும், இடங்கணிப்பொறிக்குக் கல்லிட்டு வைக்குங் கூடையும் முதலான இயந்திரப் பொறிகள் இருந்ததாக வும், இப்பொறிகள் யவனப் பொறிகள் என்றும் அறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/35&oldid=554013" இலிருந்து மீள்விக்கப்பட்டது