பக்கம்:காரும் தேரும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காரும் தேரும்

வருகிறோம் (சிலம்பு: அடைக்கலக் காதை. 207-216) சிந்தாமணியிலும் இப்பொறிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இத்தகைய யவனர்களைப் பற்றிய குறிப்பு, சீவக சிந்தாமணியிலும் சில பாடல்களில் இடம் பெற்றுள்ளது.

பொன் யவனப் பேழை (114), 'எரிமனு செம்பொன் ஆர்ந்த ஈராயிரம் யவனப் பேழை (557), மணியியல் யவனச் செப்பு: (1145 என்றெல்லாம் குறிப்புகள்

வந்துள்ளன.

மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்

அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்

தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி

-மணிமேகலை : 19: 07-109

என்று மணிமேகலையிலும்,

யவனத் தச்சரும் அவர்திக் கொல்லரும்.

-பெருங்கதை : 1 : 58-40

என்று பெருங்கதையிலும் யவனர்தம் கைவண்ணத்தால் பொலிவுறும் தொழில் நுட்பம் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய யவனர்களைப் போரில் அகப்படுத்திப்

பிணித்து நெய்யைத் தலையில் ஊற்றி அவர்தம் கையைப் பின்னால் கட்டிப் பின் தண்டமாக அருவிலை நன்கலமும் வயிரமும் கொண்டான் இமயவரம்பன்

நெடுஞ்சேரலாதன் என்று பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் பதிகம் பகருகின்றது:

நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து

நெய்தலைப் பெய்து கையிற் கொளீஇ

அருவிலை கன்கலம் வயிரமொடு கொண்டு.

-2-ஆம் பத்துப் பதிகம் : 8-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/36&oldid=554014" இலிருந்து மீள்விக்கப்பட்டது