பக்கம்:காரும் தேரும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யவனரும் தமிழ்நாடும் 35

இதனைச் சிலப்பதிகாரம் நடுகற்காதையில் ஆசிரியர் இளங்கோவடிகள் வன்சொல் யவனர் வளநாடாண்டு பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும் (141-142) என்று கூறியுள்ளார். பின்னர் வாழ்த்துக் காதையின் யசல் வரியிலும்,

வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல் தென்குமரி யாண்ட செருவிற் கயற்புலியான் மன்பதைகாக் குங்கோமான் மன்னன் றிறம்பாடி மின்செ யிடைநுடங்க வாடாமோ வூசல் விறல்விற் பொறிபாடி யாடாமோ வூசல்

வன்று யவனரைச் சேரவேந்தர் போரில் வென்ற செய்தி யினைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

இதுகாறும் காட்டப்பெற்ற குறிப்புகள் யாவும் தமிழகத்தோடு யவனர் கொண்ட நாகரிக, வணிக உறவுகளை விளக்கமுறக் TL@ణrTఆు. வரலாற்றுப் பெருமை சான்ற அத்தொன்னெடுங் காலத்திலேயே இவ்விரு இனத்தவர்களும் சிறக்க வாழ்ந்தனர் என்பதனைத் தமிழ் இலக்கியங்கள் இன்றும் எடுத்துக்காட்டி நிற்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/37&oldid=554015" இலிருந்து மீள்விக்கப்பட்டது