பக்கம்:காரும் தேரும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. காரும் தேரும்

தமிழர் தம் வாழ்வின் இருகண்கள் என மிளிர்ந்தவை காதலும், வீரமுமே. தமிழர்தம் வரலாறு பீடு மிக்கது: பெருமை சான்றது. உலகின் பிற பகுதி மக்கள் நாகரிகம் என்பதனையே அறியாது விலங்குகள்போல் இங்கும் அங்கும் வாழ்க்கையை நாடித் தேடி ஒடியபோது தமிழர் நாகரித்தின் சிறப்பிலே நிலையான-அமைதியான வாழ்வு நடாத்தியவர் கள் ஆவர். அவர்கள் வாழ்வு செல்வவளம் பெற்றுச் சீரும் சிறப்புமாகத் துலுங்கியது. o o

அகமும் புறமும் தமிழ் இலக்கியத்தின் சிறப்பியல்புகள் ஆகும். காதலும் வீரமுமே மக்கட் சமுதாயத்தின் இரு பெரும் பண்புகளாக இன்றும் துலங்கக் காணலாம். அகமாவது: "ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியுங்கூடு கின்ற காலத்துப் பிறந்த பேரின்பம். அக் கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலவனாக இவ்வாறிருந்ததெனக் கூறப் படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்' என்று உச்சிமேற். புலவர்கொள் நச்சினார்க் கினியர் தம் பொருளதிகார உரையில் புலப்படுத்தி யுள்ளார். தொல்காப்பியனார் தமிழ் கூறு நல்லுலகினை ஐந்து வகையாகப் பகுத்துக் காண்பர். காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்றும், மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி என்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/38&oldid=554016" இலிருந்து மீள்விக்கப்பட்டது