பக்கம்:காரும் தேரும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரும் தேரும் 37

வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் என்றும், கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல் என்றும், முல்லை நிலமும் மழையின்மை காரணமாக வளம் குறைந்து தம் நல்ல அண்மை கெட்டால் அவ்வளம் குறைந்த பகுதி LJΠΓιώτα) Gl) ான்றும் அழைக்கப்பட்டன. ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய பெரும் பொழுதுகள் அடுத்து எண்ணப் பெற்றன. கார், கதிரி, முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறு பெரும் பொழுதுகளையும், வைகறை, காலை, நண் பகல், எற்படுகால்ை, மாலை, யாமம் என்ற ஆறு சிறு பொழுதுகளையும் தொல்காப்பியனார் குறிப்பர். நிலமும் பொழுதும் முதற் பொருள்களாகவும், அந்நிலத்துத் தெய்வம் பகள், பறவை, விலங்கு, மரம், நீர், பறவை, உணவு முதலியன பிற, கருப்பொருள்களாகவும், புணர்தல், பிரிதல், பருத்தல், இரங்கல், ஊடல். இவற்றின் நிமித்தங்கள் அவத்திணைகளுக்குரிய உரிப்பொருள்களாகவும் கொள்ளப் பெற்றன. இவற்றைப் பொதுவாக ‘அன்பின் ஐந்திணை _i பi .

இது போன்ற இவ் ஐந்து அகவொழுக்கங்களுக்கும் புறனாக ஐந்து புறவொழுக்கங்கள் பேசப்பட்டன. தமிழர் _ம் வீரம் ஆற்றல் சான்றது: புகழுக்குரியது: கடல் கடந்தும் _று விளங்கியது. எனவேதான் தமிழ் வீரக்குடியின் மண்மையினைப் பேசவந்த சேரன் ஐயனாரிதனார் _ தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளோடு முன் _ான்றி மூத்த குடி என்று குறிப்பிட்டார். குறிஞ்சி ான்றும் அக வொழுக்கத்திற்குப் புறனான புறவொழுக்கம் வெட்சி என்றும், முல்லைத் திணைக்குப் புறனான புற வாழுக்கம் வஞ்சி என்றும், மருதத்திணைக்குப்புறனான புறவொழுக்கம் உழிஞை என்றும், நெய்தல் திணைக்குப் புறனான புறவொழுக்கம் தும்பை என்றும், பாலைத் வணக்குப் புறனான புறவொழுக்கம் வாகை என்றும் பாருத்தமுறக் கிளந்து கூறப்பட்டன.

orr-J

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/39&oldid=554017" இலிருந்து மீள்விக்கப்பட்டது