பக்கம்:காரும் தேரும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 காரும் தேரும்

காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை நிலம் என வழங்கும். இயற்கையின் இனிய சூழலில் மக்கள் இயற் கையோடு இயற்கையாகக் கைகோத்து இனிய எளிய வாழ்வு வாழ வகை செய்யும் இடம் முல்லை நிலமேயாகும். நாகரிக வளர்ச்சிக்கு இடமளிப்பது இத்தகு நிலமே என்பர் அறிஞர். இயற்கையைத் தன் வாழ்விற்குத் துணையாக மனிதன் கொள் ளுமிடம் முல்லை நிலமேயாம். பிறநிலங்களில் மனிதன் இயற் கையை நம்பியோ, அல்லது எதிர்த்தோ, அல்லது வென்றோ வாழ வேண்டியிருந்தது. ஆனால் முல்லையில் அந்தத் தொல்லை இல்லை. அங்கு வாழ்க்கை, துன்பத்தைத் தோற்று விப்பதாக இல்லாமல் இன்பத்தை ஏற்றுவிப்பதாக இருந்தது. எனவே கவலை குறைந்த, பொழுது போக்கான வாழ்க்கை யினை இயற்கை இனிதே வழங்கும் இடம் காடும் காட்டைச் சேர்ந்த கவினுறு முல்லை நிலமே என்று உறுதியாக மொழி பலாம்.

முல்லை நிலத்தில்தான் மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து சமுதாயமாக வாழும் நாகரிக வாழ்வு முகிழ்த்தது எனலாம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இணக்கமாகஇனமாக வாழும் இனிய சூழல் முல்லை நிலத்திலேயே அமைகின்றது. எனவே தமிழர் தம் சமுதாய வரலாறு முல்லையில் முகிழ்த்துப் பின் மருதத்தில் முற்றுருவம் கொள் கின்றது எனலாம். முல்லை நிலத்தில் வாழ்வோர் ஆயரும் ஆய்ச்சியரும் ஆவர். கண்ணபிரானின் கவின் நிறைந்த மகிழ்ச்சிப் பெருவாழ்வு துலங்கியது ஆயர்பாடியிலே அன்றோ? தொல்காப்பியனாரும் மாயோன் மேய காடுறை உலகமும்’ என்று முல்லை நிலத்திற்குத் தெய்வமாக மாயோனையே குறிப்பிட்டுள்ளார். ஆயர்தம் வாழ்வு பெரும்பகுதியும் ஆடுமாடுகளை மேய்ப்பதிலேயே கழிகின்றது. எனவேதான் பசுக்களை மேய்ப்பதற்கு உதவும் ஆயன் கைக்கோலே நாடு காக்கும் தலைவனாம் அரசனின் ஆட்சிக்கு உரிய செங்கோலாகப் பின்னர் அமைந்தது. குடிமக்களைக் காக்கும் செங்கோல் ஆயன் பசுக்களைக் காத்தோம்பிய கைக்கோலிலேயிருந்து பிறந்ததாகும். பசுக்களுக்குத் தமிழர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/40&oldid=554018" இலிருந்து மீள்விக்கப்பட்டது