பக்கம்:காரும் தேரும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

காரும் தேரும் 39

சமுதாயத்தில் சிறந்த மதிப்புத் தரப் பெற்றிருந்தது.

வள்ளுவப் பெருந்தகையும் கோல் செம்மைகோடினால்,

ஆப்பயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் .

-திருக்குறள் : 560

---

பறு செங்கோன்மைக்கும் பசு நன்கு பாதுகாக்கப் படுவதற்கும் உரிய தொடர்பைச் சுட்டிக் காட்டினார். ாடு' என்ற சொல்லிற்கே செல்வம்' என்பது பொருளா கும். இதிலிருந்து நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் மக்களின் செல்வமாக விளங்கியவை மாடுகளே எனலாம். :ಶಿ புறப்பொருளின் தொடக்கமும் பகைவர் ாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வந்துவிடும் வெட்சியாகவே அமைந்தது. o

'காரும் மாலையும் முல்லை' என்று தொல்காப்பிய ாரும், மல்குகார் மாலை முல்லைக்குரிய' என்று நம்பி பகப் பொருள்காரரும் குறிப்பிட்டனர். இயற்கை யன்னை விய கொலு வீற்றிருக்கும் காலம் கார் காலமாகும். அக்காலத்தில்தான் பருவ மழை பொழிந்து காடெல்லாம் |த்துக் கவினுற விளங்கும்; காட்டு மரங்கள் எல்லாம் கார் ால மழையால் தழைத்து, செடி, கொடிகள் எல்லாம் பண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்வூட்டும் பூக்களைப் பூத்துச் சழித்துக் குலுங்கும் கண் நிறைந்த கவினார் காலமாகும். ா காலமான ஆவணி, புரட்டாசியின் மாதக் காலத்திலே மணம் நிறைந்த முல்லை மணக்கத் தொடங்குகின்றது: |துப்பெயல் கண்ட பூரிப்பிலே பூத்துக் குலுங்குகின்றது: |திர்களிலே மண்டிக் கிடக்கும் பல்வகைப் போதுகளும் |லர்ந்து மட்டற்ற மனத்தைக் கமழ்விக்கும் காட்சிக் கினிய ாலம் கார் காலத்து மாலைக் காலமாகும். முல்லை மலர்கள் மணம் கவரும் வெண்மையும் துாய்மையும் அழகும் 1ளிமையும், மணமும் நிறைந்த மலர்களாகும். எனவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/41&oldid=554019" இலிருந்து மீள்விக்கப்பட்டது