பக்கம்:காரும் தேரும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 காரும் தேரும்

முல்லை நிலத்தின் இனிய காதலர்களின் இன்ப வாழ்விற்குத் துரய்மையான முல்லை மலர் அடையாளப் பூவாக அமைந் தது; முல்லை என்ற சொல்லிற்கே கற்பு’ என்ற பொருளும் உண்டு எனும் அளவிற்குக் கற்புக்கு அடையாள மான மலராகத் துலங்கிப் பெருவாழ்வு பெற்றது.

முல்லை நிலத்தில் வீரத்திற்கும் வேண்டிய இட ம் உண்டு. கார் காலத்தில் பயிர்த் தொழில் தொடங்கு கின்றது; முன்பனிக் காலத்தின் இடையில் அது முற்றுப் பெறுகின்றது. மார்கழித் திங்களின் இறுதியில் அறுவடை முதலியன வெல்லாம் முடிந்து, தைத் திங்கள் தொடக்கத் தில் களஞ்சியம் நிறைந்துவிடுகிறது. இனி, உழவுக் கலப்புை களுக்குச் சில திங்கள் வேலை இல்லை. உழைத்த கரங்கள் சிறிது ஒய்வு பெறலாம். இத்தகு நேரங்களில் இளைஞர் தம் நெஞ்சங்கள் காதலியர் உவக்கும் வீர விளையாட்டு களில் செல்கின்றன. நாட்டைக் காக்கும் போர் தொடங்கி னாலும் வீர இளைஞர்கள் தம் காதலியரிடம் விடை, பெற்றுக் களிப்டோடு களம் நோக்கி ஏறு நடை போட்டுப் பீடுடன் சென்று களம் கொண்டு, வாகை குடித் திரும்பினர். போர்மேற் செல்லும் கணவர் தம் மனைவியரிடம் கார்காலத் தொடக்கத்தில் -ஆவணி மாதத் தொடக்கத்தில் உறுதியாகத் திரும்பி வந்துவிடுவதாகச் சொல்விச் செல்லல் மரபாகும். கணவ ன் சொல்லைத் தேறி, கணவன் வருகையை நம்பிக்கையோடு எதிர்நோக்கி, அவன் கூறிச் சென்ற பருவம் வருமளவும் இல்லறக் கடமைகளை ஒம்பி

வருதல் கற்புடை மை னவியின் கடப்பாடாகும். இவ்வாறு இல்லாள் இல்லில் ஆற்றியிருத்தலையே இல்லிருத்தல் முல்லை' என்றனர். கணவனும் தான் கூறிய சொல்

பிறழாமல் கார்காலத் தொடக்கத்தில் திரும்பி வருவான் மனைவியும் கற்பு நெறி வழுவாது கணவன் சொல் தே

  1. m 睡 - * * - - H -- H H. H LH வீட்டில் ஆற்றியிருப்பாள். 3 ՈDւI எனற சொல்லிற்கு கல் போன்ற திண்மை நிலை என்றும், இல்வாழ்விற் இயைந்தன. கற்றுத் தெளிந்து, கற்ற நெறியே கட.ை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/42&oldid=554020" இலிருந்து மீள்விக்கப்பட்டது